×

மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 26: திருவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. பெரும்பாலும் மாம்பழங்கள் பறிக்கும் பணி முடிவடைந்த நிலையில், ஒரு சில தோப்புகளில் மாம்பழங்கள் பறிக்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், மம்சாபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (50) என்பவரின் தோப்பில் 170க்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. இதில் பல மரங்களில் மாம்பழங்கள் பறிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டு யானைகள் பாலசுப்ரமணியம் மாந்தோப்பில் புகுந்து 30க்கும் மேற்பட்ட மாமரங்களை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து விவசாயி பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘நான்கு ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது. இதில் ஊடுபயிராக நெல்லி, எலுமிச்சை பயிரிட்டுள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு, யானைகள் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களைச் சாய்த்தது. தற்போது 30க்கும் மேற்பட்ட மாமரங்களை சாய்த்துள்ளது. மழை இல்லாத நேரத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளேன். யானைகளின் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு புகார் அளித்துள்ளேன். அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை