வெறிநாய் கடித்து வடமாநில வாலிபர் பலி

கோவை, ஜூன் 25: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சோனு (35). இவர் கோவை இடையர்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும்,  உடல்நிலை சரியாகவில்லை. தொடர்ந்து நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது சோனுவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததும், அதனால் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். வெறிநாய் கடித்து உரிய சிகிச்சை பெறாத காரணத்தால் சோனு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Native American ,
× RELATED ரேபிஸ் பயங்கரம்