×

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாயால்

சுகாதார சீர்கேடு அபாயம்திருச்செங்கோடு, ஜூன் 21: திருச்செங்கோடு புதிய பஸ் நிலைய பகுதியில், தூர்வாராத சாக்கடை கால்வாயால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வாடகை கார்கள் நிறுத்தும் இடத்திலும், கடைகளுக்கு பின்புறமும் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாயில் கடைக்காரர்கள் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, இந்த சாக்கடை கால்வாயை சரியாக சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் கவர்கள் உள்பட குப்பை கழிவுகள் வாரக்கணக்கில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.

இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்