×

மின்கசிவு காரணமா? ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை ஏமாற்றிய பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம்

தஞ்சை, ஜூன் 21: ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை ஏமாற்றிய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை ஏமாற்றிய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாநகராட்சி சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வாழ்த்தி பேசினார்.

தஞ்சை மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் 24 ஒப்பந்த தொழிலாளர்கள் 3 மாத சம்பள பாக்கி தொகை தலா ரூ.18 ஆயிரத்தை மார்ச் 27ம் தேதிக்குள் வழங்குவதாக அமைதி பேச்சுவார்த்தையில் ஒத்து கொண்டதை உடனே நிறைவேற்ற வேண்டும். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்டி இபிஎப், இஎஸ்ஐ செலுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் ஊதியத்தை ஏமாற்றி கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் விஜயராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பிய 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Engineers ,contract workers ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி