×

பள்ளி சுற்றுச்சுவர் அருகில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றம்

வாலாஜாபாத், ஜூன் 21: தினகரன் செய்தி எதிரொலியாக, நடுநிலைப்பற்றி சுற்றுச்சுவர் அருகே இருந்த குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் அகற்றினர். வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து, இங்குள்ள நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில்தொட்டியில் கொட்டி எரிக்கின்றனர்.இதனால், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், இவ்வழியாக செல்லும் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், துப்புரவு ஊழியர்களை வரவழைத்து, பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளையும், குப்பைகளையும் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சீரமைத்தார்.

Tags : school circuit ,
× RELATED பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்