வேளாண்மை யுக்திகளை அறிய விவசாயிகள் ஆந்திரா பயணம்

சிவகங்கை, ஜூன் 19:  சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கூட்டு பண்ணைய திட்டம் குறித்து அறிய ஆந்திர மாநிலம் சென்றனர்.  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வெளி மாநில, உள் மாநில, உள் மாவட்ட பயிற்சிகள், கண்டுணர்வு சுற்றுலாக்கள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் மூலம் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணைய திட்டம், நீரா பானம் தயாரித்தல், பண்ணை இயந்திரமாக்கல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், மானாவாரி பயிர் சாகுபடி, மர எண்ணெய் பயிர் சாகுபடி மற்றும் இயற்கை பண்ணையம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கூட்டுப்பண்ணைய திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 20 உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ஆந்திரா மாநிலம் பிரகதி யுவா கேந்திரம் நெல்லூருக்கு ஐந்து நாள் பயணமாக சென்றனர். கலெக்டர் ஜெயகாந்தன் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர்(பொ) இளங்கோவன், வேளாண்மை துணை இயக்குநர்(உபநி) சசிகலா, வேளாண்மை அலுவலர்(உபநி) பரமேஸ்வரன், வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Andhra ,
× RELATED டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல...