8ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை, ஜூன் 19: தேவகோட்டையில் தனியார் நிறுவன பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்.  கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகங்கை மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 22 சனிக்கிழமை, தேவகோட்டை ஆனந்தா கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ தொழிற்கல்வி, டிப்ளமோ, செவிலியருக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமிற்கு வரும் பொழுது அனைத்து விவரங்களுடன் கூடிய பயோடேட்டா, அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்