வேமங்காட்டு வலசு அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

பள்ளிபாளையம், ஜூன் 19: குமாரபாளையம் வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று வறட்சி எதிர்ப்பு தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கௌரி தலைமை தாங்கி பேசினார்.  பூமியில் உள்ள இயற்கையான பசுமையான வனங்கள், இயற்கை வளங்களை மனிதன் அழிப்பதால் தான், பூமி பாலைவனமாகிறது. இதனால் மனித இனம் முற்றிலும் அழிந்து போகும். இயற்கை நமக்கு விட்டுச்சென்றுள்ள இந்த பூமியை காக்க மரம் செடி கொடிகளை வளர்ப்போம். வனங்களையும் அழிக்காமல் காப்போம் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 20 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் காந்திநாச்சிமுத்து, சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் குமார், அறிவியல் ஆசிரியர் முத்து, மாதேசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : school ,
× RELATED 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்