டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை கூடுதல் பேருந்துகள் இயக்காததால் பயணிகள் காத்துக்கிடக்கும் அவலம் டெப்போவில் முடங்கி கிடக்கும் பஸ்கள்

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையால் பயணிகள் அதிகம் செல்லும் சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்காததால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னை, திருச்சி, கோயாம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமேஸ்வரம், காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பஸ்கள் செல்கிறது. புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் தினசரி இயக்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் போதிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறையே. இதனால் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் கூடுதல் பேருந்துகள் இயக்காமல் டெப்போவில் நிறுத்தப்பட்டு கிடக்கிறது. இதனால் பயணிகள் போக வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களுக்கு பயணிகளின் வருகையை பொறுத்து அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்குவார்கள். தற்போது இதுபோன்ற செயல்கள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடப்பதில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்துக்கிடப்பதால் சில முக்கிய பணிகள் குறித்த நேரத்தில் முடிக்க முடிவதில்லை. இதேநிலை நீடித்தால் புதுக்கோட்டையில் இருந்து பேருந்து பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.விடுப்பு இல்லாமல் தொடர்ந்து பணிதீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் விடுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியில் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பின்போது மன உளைச்சலில் பணி செய்தால் அந்த பணி சிறப்பாக இருக்காது. ஆகையால் தீயணைப்பு வீரர்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.Tags :
× RELATED டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி