×

போக்குவரத்து அதிகாரிகள் மெத்தனத்தால்

நாகை, ஜூன் 19: சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்று உயிருக்கு உளை வைப்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நாகை பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து மேலவாஞ்சூர் ரவுண்டானா வரை இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை சொல்ல முடியாது. இந்த ஆட்டோக்களுக்கு போட்டியாக சரக்குகளை ஏற்றி செல்லும் மினி லாரியில் பயணிகளை ஏற்றி செல்லும் நிலை நாகையில் உள்ளது. அதிலும் காலை நேரங்களில் பார்த்தால் முதலாவது கடற்கரை சாலை, தோணித்துறை ஆகிய இடங்களில் அதிக அளவில் உள்ளது. பயணிகளும் தங்களது ஆபத்தான பயணத்தை உணராமல் ஏதே பணத்தை மிச்சம் செய்வதாக நினைத்து கொண்டு இப்படிப்பட்ட சரக்கு ஏற்றும் வாகனங்களில் ஏறி செல்கின்றனர். இதை போலீசாரும் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்வதும் இல்லை. வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது இல்லை.

இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோர்கள், இதுபோல் உயிரை காவுவாங்கும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பயணிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்விகள் கேட்கின்றனர்.ஏதோ பிழைப்பை நடத்த வேண்டும் என்று பயணிகள் சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஏறி செல்வது தவறு என்பதை முதலில் உணர செய்ய வேண்டும். ஏதோ ஒரு நாட்கள் ஆய்வு நடத்தினோம் என்று இருக்காமல் திடீரென ஆய்வுகள் நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் எதிர்காலத்தில் சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில் பயணிகள் பயணம் செய்வதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Traffic Officers ,
× RELATED திண்டுக்கல்- பழநி வழித்தடத்தில்...