கரூர் ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி முகாம்

கரூர், ஜூன் 19: கரூர் ரயில்நிலையத்தில் சேலம் கோட்டத்தினால் ஸ்வச்பாரத் தூய்மைப்பணி முகாம் நடத்தப்பட்டது.உதவிகோட்ட அலுவலர் குமார், நிலைய மேலாளர் ராஜராஜன் ஆகியோர் காந்தியின் சுயசரிதை மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பரணி பார்க் சாரணர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கரூர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்த உதவியதோடு தூய்மையின் இன்றியமையாமை குறித்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பரணிபார்க் சாரணர் மாவட்ட ஆணையர் முனைவர் ராமசுப்பிரமணியன், துணை ஆணையர் சுதாதேவி, செயலர் பிரியா கலந்து கொண்டனர்.

Tags : railway station ,Karur ,
× RELATED காரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி