×

நல வாரியங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க பதிவு முகாம்

ஊட்டி, ஜூன் 19:  அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் 20ம் தேதி (நாளை) பந்தலூர் வட்டாம், அய்யன் கொல்லி கிராமத்தில் நடக்கிறது.  இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்ட தொழிலாளர், வீட்டுப்பணியாளர், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர், சமையல் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கொன 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியங்களில் தொழிலாளர் பதிவு துறையின் சேர்க்கை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்த நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடக்கவுள்ளது.

  இம்முகாம் 20ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பந்தலூர் வட்டாம், அய்யன் கொல்லி கிராமத்தில் உள்ள சமுதாய கூட்டத்தில் நடக்கிறது. இதுவரை நல வாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்தினை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்தில் பதிவு செய்து வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். பதிவு கட்டணம் ஏதும் இல்ைல. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல், வயது குறித்த சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் (தேசிய மயமாக்கப்பட்ட வங்கி) ஆகிய ஆவணங்களுடன் தொழில் பற்றிய சான்றினை உரிய நபர், அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய இயலாது. இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : Camp ,Health Boards ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு