பார் ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கோவை, ஜூன்.19:  கோவை தொண்டாமுத்தூர் அருகே கலிங்கநாயக்கன் பாளையத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு பூபதிபாண்டியன்(24) என்பவர் ஊழியராகவேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த 3 பேர் பாருக்கு மது குடிக்கவந்தனர்.பூபதி பாண்டியனிடம் மது கொடுக்குமாறுகேட்டனர். நேரம் முடிந்து விட்டதால் மதுகொடுக்க முடியாது என பூபதி பாண்டியன்மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பூபதி பாண்டியனை தாக்கினர். இது குறித்து பூபதி பாண்டியன் அளித்த புகாரின் பேரில்  போலீசார்உலியம்பாளையம் கனகராஜ்,பூபதி, சுண்டப்பாளையம் ரமேஷ் ஆகியோர்மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : servant ,
× RELATED மறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு