கோவை மெடிக்கல் சென்டரில் வெரிகோஸ் வெயின் முகாம்

கோவை, ஜூன் 19: கோவை மெடிக்கல் சென்டரில் வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை முகாம் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உள்ள வெயின் கிளினிக்கில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் ரத்த நாளங்களில் அதிநவீன கருவிகள் மூலம் ஸ்கேன் செய்து ரத்த நாளங்கள் வீக்கத்துக்கான காரணங்களை கண்டறியலாம். முகாம் நடைபெறும் காலத்தில் ஸ்கேன் செய்ய 50 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நோயை ரேடியோ பிரீவென்சி முறையில் எளிதாக சிகிச்சை பெற்று ஒரேநாளில் வீடு திரும்ப முடியும். முகாமில் பரிசோதனை செய்ய 73393 33485 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

× RELATED போலீசாருக்கு 32 இ செலான் கருவி