×

குறைதீர் கூட்டத்தில்

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தி–்ல் நடந்த குறைதீர் கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச மனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 367 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் துறை அலுவலர்கள் கொடுத்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்தினார்.மேலும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறையின் சார்பில், பள்ளிகளில் சுகாதாரமான முறையில் சமையல் தயார் செய்திடும் வகையில் சத்துணவு ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.

சத்துணவு ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் பெட்டகம் வாகன ஓட்டிகள் கடும் அவதி கலெக்டர் வழங்கினார்  பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி பழைய வாகனங்கள்  விற்பனையில் உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் ரூ.73.53 க்கு மேலும் ,டீசல் ரூ.78.45 க்கும் மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றம் இன்னும் சில மாதங்களில் ரூ.100 தொட்டுவிடும் என்று பொருளாதார வள்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.இந்நிலையில் தமிழகத்தில் பெருவாரியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழைய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்ற னர். இதற்காக பிரத்யோகமாகன ஷோரூம்கள் பல்வேறு இடங்களில் அமைத் துள்ள னர். இந்த வாகனங்ளுக்கு முன்னணி நிதி நிறுவனங்கள் கடன் வசதியும் செய்து தருகிறது. இதனால் பழை வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்தது.அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களின் கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ங்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் அவர்களு க்கு உள்ள வசதியை பொருத்து அவர்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்கி செல் கின்றனர்.இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வாங்கு வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 50 கீலோமீடர் துாரம் வாகனங்களை இயக்குபவர்களுக்கு கூடுதாலக ரூ.100 ல் இருந்து ரூ.150 வரை அதிகரி க்கிறது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 வரை செலவு அதிகரிக்கிறது.

இந்நிலையில் வாகனங்கள் வாங்க முடிவு செய்தவர்கள் தங்கள் முடிவுகளை தற்போது நிறைவேற்றாமல் தள்ளிபோட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துவிட்டது. வரும் நாட்களில் இந்த விற்பனை குறைவு கண்டிப்பாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பழைய வாகனங்கள் விற்பனை செய்வோர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து வாகனங்கள் விற்பனை வியாபாரிகள் கூறியதாவது: புதிய வாகனங்கள் வாங்கி ஒரு வருடம் பயன்படுத்திவிட்டு சிலர் விபற்னை செய்வார்கள்.மேலும் கடன் பிரச்னையால் வாகனங்கள் விற்பனை செய்வார்கள். மேலும் அவ்வப்போது மோட் டார் வாகன சந்தையில் அறிமுகமாகும் புதிய ரக வாகனங்களை வாங்க ஏற்கனவே வைத்துள்ள வாகனங்களை விற்பனை செய்வார்கள். இதபோல் வங்கியில் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தாதவர்களின் வாகன ங்களை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து ஏலம் விடுவார்கள். இப்படி வரும் வாக னங்களை வாங்கி நாங்கள் சில தொகை லாபம் நிர்ணயித்து வியபாராம் செய் வோம். இதற்கு வங்கி கடன்குளும் ஏற்பாடு செய்து தருவோம். கடந்த சில ஆண்டு களாக இந்த வியாபாரம் நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்தது.இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வியா பாரிகள் விற்பனை குறைந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்தே வருகிறது. சுமார் 20 சதவீம் விற்பனை குறைந்துவிட்டது. இன்னும் வரும் நாட்களில் கண்டிப் பாக விற்பனை சரிவு அதிகரிக்கும். இதனால் நாங்கம் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை என்றனர்.தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வியாபாரிகள் விற்பனை  குறைந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்தே வருகிறது.  சுமார் 20 சதவீம் விற்பனை குறைந்துவிட்டது. இன்னும் வரும் நாட்களில்  கண்டிப் பாக விற்பனை சரிவு அதிகரிக்கும். இதனால் நாங்கம் கடும் நஷ்டத்தை  சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

20 தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வாங்கு வோர்களின்  எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 50 கீலோமீடர் துாரம் வாகனங் களை  இயக்குபவர்களுக்கு கூடுதாலக ரூ.100 ல் இருந்து ரூ.150 வரை அதிகரி க்கிறது.  இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 வரை  செலவு அதிகரிக்கிறது. சதவீதம் சரிவு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும்.... வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம்..

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...