×

டாஸ்மாக்கில் பல்க் சேல் தடுக்க உத்தரவு

கோவை, ஜூன் 14:கோவை மாவட்டத்தில் 145 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலமாக தினமும் 2.7 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. மாவட்ட அளவில் 153 மதுக்கடைகள் மூடப்பட்ட பின்னர் கள்ளத்தனமான விற்பனை (பிளாக் சேல்) பரவலாக நடக்கிறது. இதற்கு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக தெரிகிறது. முறைகேடாக மது விற்பனை செய்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த மதுபாட்டில்கள் முட்புதர், பெட்டி கடை, வியாபார கடை, ஓட்டல்களில் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறது.

 டாஸ்மாக் கடைகளில் இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் வழங்கப்படுவதால் தான் முறைகேடு நடக்கிறது என மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும், கலால் துறையினருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர். உள்ளூர் ேபாலீசார் முறைகேடாக மது விற்பனை ெசய்ய ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பல்க் சேல் முறையை தடுக்க சப் டிவிஷன் வாரியாக ேசாதனை நடத்த மாவட்ட எஸ்.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து பெட்டி பெட்டியாக மதுபானம் வழங்கப்பட்டால் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை