×

ஆயக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு பொதுமக்கள் கோரிக்கை

பழநி, ஜூன் 14: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க வேண்டிய சூழல் நிலவி அவசியமானதாக உள்ளது.

இந்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது:
ஆயக்குடி பேரூராட்சியின் பல இடங்களில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு விட்டது. அரசியல் காரணங்களை மையப்படுத்தி காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது. பொதுமக்களின் அவஸ்தைகளை உணர்ந்து உடனடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : applicants ,Ayikudi Panchayat ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்