×

தாம்பரத்தில் 1800 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

தாம்பரம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, தாம்பரம் நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், ஜனார்த்தனம், சிவக்குமார்,  காளிதாஸ், செந்தில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று தாம்பரம் மார்க்கெட் பகுதி, முத்துரங்கன் சாலை, கேம்ப் ரோடு, பாரத மாதா தெரு, ஐ.ஏ.எப். சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கடைகளில் இருந்து  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு ரூ60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...