×

தோல் விலை உயர்வால் பெல்டு, காலணி விலை கிடுகிடு உயர்வு

புதுக்கோட்டை, மே 25: தோல்விலை உயர்வால் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான பெல்ட்டுகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தோல் தொழிற்சாலைகளில் கால்நடைகளின் தோலை பதப்படுத்தி பெல்ட், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கால்நடைகளின் தோல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி கறிகடைகளில் வெட்டப்படும் ஆட்டுகளின் தோல்களை அதன் தரத்திற்கு ஏற்றவாறு தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். இதேபோல் தற்போது தமிழக முழுவதும் கிராமங்களில் வைகாசி திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதனால் அங்கு கோயில்களுக்கு வேண்டுதாலக நுற்றக்கணக்கான ஆடுகள் நேர்த்திகடனுக்காக வெட்டுகிறார்கள். அப்போது கிடைக்கும் தோல்களும் தோல் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு நளைக்கு ஒரு பெருநகர் பகுதியில் சுமார் 200 ஆடுகளின் தோல்கள் கிடைத்து வந்த இடத்தில் தற்போது பாதியாக குறைந்து 100 தோல்கள் தான் கிடைக்கிறது. இதே நிலைதான் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீடித்து வருகிறது. இதனால் தொழிற்சாலைக்கான தோல்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் பெருவாரியான தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் கால்நடைகளின் வளர்ப்பு குறைந்துள்ளது.

இதனால் தோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தோல்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பெல்ட்டுகள், காலணிகள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ரூ.600க்கு  விற்பனை செய்த தோலால் தயாரிக்கப்பட்ட பெல்ட் தற்போது ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ரூ.ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட காலணிகள் தற்போது ரூ.ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. தரமான ஷீக்கள் கடந்த 6 மாத்திற்கு ரூ.ஆயிரத்தி 500க்கு விற்பனைனாது. ஆனால் இதே ஷூக்கள் தற்போது. ரூ.2ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தோல் தொழிற்சாலைகளில் இருந்து தோல் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கறிகடையில் உள்ள ஒரு தோல் ரூ.100க்கு விற்பனையானவைகள் அனைத்தும் தற்போது ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி கிடைக்கும் தோல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு சில நேரங்களில் தோல் தொழிற்சாலைகள் கேட்கும் தரமான தோல்கள் கிடைப்பதில்லை.  இதற்கு முக்கிய காரணம் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளின் வளர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தோல்கள் கிடைப்பதில் சிரமம், தொழிற்சாலைகள் குறைவு இப்படி பல்வேறு காரணங்களால் தோல்களால் தயாரிக்கப்படும் பெல்ட்கள், காலனிகள், ஷூக்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை  உயர்வு வரும் காலத்தில் நீடிக்கும் என்ற வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : shoe price hike ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ