×

எர்த்தன் டேம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஊட்டி, மே 25: ஊட்டி எர்த்தன் டேம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள தலைக்குந்தா பகுதிக்கு அருகே எர்த்தன் டேம் அணை உள்ளது. எர்த்தன் டேம் சுமார் 3 கி.மீ., தூரத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. காட்டெருமைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் இந்த அணைக்கு வந்து தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இந்த அணையை ஒட்டிய வனப்பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக எர்த்தன் டேம் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்துள்ளது. சிலர் மது பானங்கள், இறைச்சி போன்றவைகளை வாங்கி கொண்டு வந்து இந்த வனப்பகுதியில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் மது அருந்தி விட்டு காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கிளாஸ்கள் போன்றவற்றை  வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதனால் எர்த்தன் டேம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் இந்த வனப்பகுதியில் தீ மூட்டி சமையல் செய்வதால் காட்டு தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் மது அருந்த அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். மேலும்  வனப்பகுததியில் தீ மூட்டுபவர்கள் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : area ,Etheren Dame ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...