ஐ.பெரியசாமி புகழாரம் திமுகவினர் கொண்டாட்டம்

கொடைக்கானல், மே 25: தமிழக மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளிலும், சட்டப்பேரவை தேர்தலில் 13 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. இதை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடினர். கொடைக்கானலில் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வெடி வெடித்தும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags : Celebration ,celebrations ,
× RELATED குளிர்கால கொண்டாட்டம்