×

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வரலாற்று வெற்றி

சிவகங்கை, மே 25: சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3லட்சத்து 32ஆயிரத்து 244வாக்குகள் கூடுதலாக பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. சிவகங்கை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை எண்ணப்பட்டன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14மேஜைகள் போட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. காங்கிரஸ், பிஜேபி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 18சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 26பேர் இத்தொகுதியில் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னலையில் இருந்தார். முதல் சுற்றில் இவர் 25ஆயிரத்து 135வாக்குகளும், பிஜேபி வேட்பாளர் எச்.ராஜா 9ஆயிரத்து 623வாக்குகளும் பெற்றனர். இதே அளவிலான முன்னிலை அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்தது. இறுதியாக 25சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் 2ஆயிரத்து 102தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 5லட்சத்து 66ஆயிரத்து 104வாக்குகள் பெற்றார். இது பதிவான வாக்குகளில் 52.19சதவீதமாகும். இவருக்கு அடுத்தபடியாக வந்த பிஜேபி வேட்பாளர் எச்.ராஜா 565தபால் வாக்குகள் உட்பட 2லட்சத்து 33ஆயிரத்து 860வாக்குகள் பெற்றார். வாக்கு சதவீதம் 21.55சதவீதமாகும். பிஜேபி வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 3லட்சத்து 32ஆயிரத்து 244வாக்குகள் கூடுதலாக பெற்றார். சிவகங்கை தொகுதி வரலாற்றில் இது மிகப்பெரிய அளவிலான வாக்கு வித்தியாசமாகும். கடந்த 2014மக்களவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பிஆர்.செந்தில்நாதன் எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப.துரைராஜைவிட 2லட்சத்து 29ஆயிரத்து 385வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

Tags : Congress ,victory ,constituency ,Sivaganga Lok Sabha ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...