×

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சத்துணவு மையம் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியது

புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சத்துணவு மையம்புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் கோவில்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் சத்துணவு மையம் இல்லாததால் பெற்றோர்கள் தங்களின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பால்வாடியில் சேர்க்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதையடுத்து கோவில்பட்டி பகுதியில் சத்துணவு கூடம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2006-07ம் ஆண்டு சுமார் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு மையம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிகள நிறைவு பெற்று கடந்த 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை சத்துணவு கூடம் திறக்கப்படவில்லை.

குழந்தைகளின் நலனுக்காக கட்டப்பட்ட சத்துணவு மையம் யாருக்கும் பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சத்துணவு மைய கட்டிட சுவர் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறி உள்ளது.இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சத்துணவு மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : nutrition center ,4th Ward ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்