×

அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

பண்ருட்டி, மே 24:  பண்ருட்டி  அருகே விசூர், மேல்மாம்பட்டு, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் தலைமையில் கொண்ட   குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சியில் அனுமதிபெறாமல்  குடிநீர் இணைப்புகள் இருப்பதை அறிந்து அவற்றை துண்டிக்குமாறு  சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பிடிஓ உத்தரவிட்டார். இதன் பேரில்அனுமதி பெறாத 45  இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அப்போது, துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் சந்தோஷ்குமார், தமிழ்செல்வி, ஊராட்சி  செயலாளர் இளவரசன், வடிவேல்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்

நெய்வேலி, மே 24: நெய்வேலி நகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் முறையாக பராமரிக்காமல் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் உள்ள புல்களுக்காக மாடுகள் மேய்ச்சலுக்கு வருகிறது. இவைகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், மாடுகள் சண்டையிட்டு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கவும், உரிமையாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நெய்வேலி நகர நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்