×

மக்கா சோளப்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கறம்பக்குடி, மே23: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி விவசாய வேளாண்மை வட்டாரத்தில் விவசாயிகள் ஏராளமானோர் மக்கா சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த மக்கா சோளம் பயிரில் தற்போது படைப் புழு அதிக அளவில் தாக்குவதாக கூறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் இதனை போக்கு வகையில்  கறம்பக்குடி வேளாண் வட்டாரம் கரு வட தெரு கிராமத்தில் மக்கா சோளம் பயிரில் படைப் புழு தாக்குதல் குறித்த  விழிப்புணர்வு பயிற்சி முகாம்  நடை பெற்றது  முகாமிற்கு  கலெக்டரின்  நேர் முக உதவியாளர் (வேளாண்மை )கோமதி தங்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார்.வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் முன்னிலை  வகித்தார்  விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கறம்பக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  பெரிய சாமி பேசுகையில், மக்காச்சோளம் பயிரில் படைப் புழு தாக்குதலில் இருந்து பயிர்களை  காத்து  கொள்ள  கோடை உழவு  செய்வதன் அவசியம் குறித்தும் மேலும் அதனால் படைப் புழு கூட்டு புழுக்களை அழித்து  மற்றும் விதை நேர்த்தி செய்தல் மேலும் மக்கா சோளம் பயிரில்  பேவரியா பேசியானா என்ற மருந்தினை ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் கலந்து விதை நேர்த்தி செய்தல் குறித்தும் விளக்கம் அளித்தார்.

பயிற்சி முகாமில் குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் சுகன்யா கண்ணா  மக்கா சோளம் பயிரில் படைப் புழு அதிக அளவில் தாக்குதல் அறிகுறிகள், படைப் புழு வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்பாடு முறைகள் வளர்ச்சி ,பருவம் தண்டு பருவம் பூக்கும் பருவம்  மற்றும் கதிர் வரும் பருவங்களில் பூச்சியின் தாக்குதல் அறிகுறிகள்  மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாது காப்பு முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.மேலும் இந்த மக்கா சோளம் பயிரில் படைப் புழு அதிக அளவில் தாக்குதல் கட்டுப்படுத்தும் பயிற்சி முகாமில் விவசாயிகளிடம் படைப் புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு டெமோ விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.முகாமில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக பயிற்சி முகாமிற்கு ஏற்பாடுகளை கறம்பக்குடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags : attack ,Training Camp ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...