×

விராலிமலை வட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் விவசாயிகளுக்கு அழைப்பு

விராலிமலை, மே 23: விராலிமலை வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுபற்றி விராலிமலை வேளாண்மை உதவி இயக்குனர் பிரபாவதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 100 சதவீதம் அரசு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருவதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு சாகுபடி பரப்பை அதிகரித்து நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இதற்கு ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு குறு விவசாயி என்பதற்கான சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ முதலியவற்றை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் கொடுத்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தில் அதிகமாக ஒரு குடும்பத்தினர் 5 ஏக்கர் வரை நுண்ணீ–்ர் பாசனம் அமைத்து பயனடையலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Micro-irrigation farmers ,Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா