அரசு பாலிடெக்னிக்கில் சேர 24ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது

கரூர், மே 22: அரசு பாலிடெக்னிக்கில் சேர கலந்தாய்வு 24ம்தேதி நடைபெறுகிறது. காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 24ம்தேதி (வெள்ளி) நடைபெறுகிறது.2ம் ஆண்டில் நேரடி மாணவர்சேர்க்கைக்காக 85இடங்கள் உள்ளன. இதில் பிளஸ்2மற்றும் ஐடிஐ முடித்த மாணவர்களை நேரடியாக சேர்க்க கலந்தாய்வு 24ம்தேதி காலை 9மணிமுதல் மாலை 4மணிவரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கு தனித்தனியாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக்கடிதம் கிடைத்தவர்கள் மற்றும் கிடைக்காதவர்கள் தங்களின் தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கைக்கட்டணம் ஆகியவற்றுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.

× RELATED சீனாபுரம் கொங்கு வேளாளர்...