×

பயங்கர சூறைக்காற்று சின்னமனூர் பகுதியில் 10 ஆயிரம் வாழை சேதம்

சின்னமனூர், மே 19:  சின்னமனூர் பகுதியில் நேற்று முன் இரவு வீசிய சூறைக்காற்றுக்கு 10 ஆயிரம் வாழை, 30க்கும் மேற்பட்ட தென்னைமரங்கள சேதமடைந்தன. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று ன்தினம் பகலில் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடின. இரவு 9 மணியளவில் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.

சூறைக்காற்றுக்கு சின்னமனூர்-போடி சாலையில் உள்ள சிந்தலைசேரி பகுதியில் ஹால்மாக்ஸ் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் வாழைமரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. குச்சனூர்-தேனி சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகே இருந்த 70 ஆண்டு பழமையான புளிய மரம் வேருடன் சாய்ந்தது. அத்துடன் துரைச்சாமிபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. சூறைக்காற்று காரணமாக சின்னமனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Chinnamanur ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி