×

பசுமை பட்டாசு தயாரிப்புக்கு அனுமதி கொடுக்க ‘பெசோ’ பரிசீலனை

சிவகாசி. மே 17; பசுமை பட்டாசு தயாரிப்புக்கான பார்முலாவிற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) பரிசீலனை செய்து வருகிறது என்றும் பட்டாசு ஆலைகள் தொர்ந்து இயங்கும் என்றும் டான்பாமா தலைவர் தெரிவித்தார். பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் கடந்த 2018, அக்டோபர் 23ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ‘‘பட்டாசு தயாரிக்க பேரீயம் நைட்ரேட்டை பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும்’’ உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆலைகளை மூடி போராட்டம் நடத்தினர். கடந்த மார்ச்சில் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரீயம் நைட்ரேட் பயன்படுத்தாமல், பசுமை பட்டாசு தயாரிக்கும் பார்முலாவை, இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் (நீரி) ஏப்ரல் 30க்குள் தயாரித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் ஒப்புதல் பெற்று, அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, ‘நீரி’ அமைப்பு சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு பார்முலாவை தயாரித்தது. ‘நீரி’ தயாரித்த பசுமை பட்டாசு பார்முலாவை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் பசுமை பட்டாசு பார்முலாவிற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி மறுத்துவிட்டதாக பட்டாசு உரிமையார்கள், தொழிலாளர்கள் மத்தியில் வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி  உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சோனிகணேசன் நிருபா–்களிடம் கூறும்போது, ‘பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. அரசு சார்பில் தனியாக வக்கீல் நியமித்து, வாதாடப்பட்டு வருகிறது. பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற எவ்வித தடையும் இல்லை. எனவே வழக்கம்போல உற்பத்தி நடைபெற்று வருகிறது. பசுமை பட்டாசு தயாரிப்புக்கான பார்முலாவிற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) அனுமதி வழங்க மறுத்ததால், பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. பசுமை பட்டாசு தயாரிப்புக்கான பார்முலாவிற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் பரிசீலனை செய்து வருகின்றது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்துவது பற்றியும் பெசோ பரிசீலித்து வருகிறது. பட்டாசு வணிகர்கள், விற்பனையாளர்கள் வழக்கம்போல ‘ஆர்டர்’ கொடுத்து வருகின்றனர். பட்டாசு ஆலைகள் தொடர்ந்து இயங்கும்’ என்றார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை