×

விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம் வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தல்

பெரம்பலூர், மே 17: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் வேளாண்மை இய க்குனர் தட்சிணாமூர்த்தி பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறைமூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து நேரில் ஆய்வுசெய்தார். பெரம்பலூர் மாவட்ட வேளா ண்மைத் துறைமூலம் செயல்படுத்தப்ப டும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி இரூர், செங்குணம், பேரளி ஆகிய 3 கிராமங்களில் நேரில் ஆய்வுசெய்தார். ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தின் சிறப்புமுகாமில் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முடிவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது விவசா யிகள் மண் மாதிரி முடிவுகளின் அடிப்ப டையில் உரமிடுவதால் உரச் செலவி னை குறைப்பதுடன், மண் வளத்தினையும் மேம்படுத்தலாம் என தெரிவித்தார். மேலும் இக்கிராமத்தில் தேசிய மண்வள இயக்கத்தின் மூலம் நடைபெற்ற மண் மாதிரிகள் சேகரிப்பு முகாமினை பார்வையிட்டார். மேலும் இதே பகுதியில் கோடை உழவுப் பணிகளை ஆய்வுசெய் யும் பொழுது, விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலமாக, தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டு ப்புழுக்கள்  மற்றும் முட்டைகளை அழிப்பதுடன், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையையும் மேம்படுத்தலாம் என தெரிவித்தார்.


பின்னர் பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குணம் கிராமத்தில் செல்வ ராஜ் என்ற விவசாயியின் மக்காச்சோள வயலில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இனக்கவர்ச்சி ப்பொறி செயல்விளக்கத் திடலினை ஆய்வு செய்தார். அப்போது  விதைகள் விதைப்பதற்கு முன்பே ஹெக்டேருக்கு 12 எண்ணி க்கை வீதம் இனக்கவர்ச்சி பொறிகள் வைப்பதன்மூ லம் இயற்கையான முறையில், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்துவிட லாம். ஒருகிலோ மக்காச்சோள விதை க்கு, 10கிராம் வீதம்  பேவேரியா பேசி யானா என்ற பூஞ்சணத்தை கலந்து, விதை நேர்த்தி செய்வதன் மூலம் இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மக்கா ச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகி யவற்றை விதைப்பதன்மூலம் படைப்புழு வின் தாக்குதலை குறைக்கலாம் எனத் தெரிவித்தார். குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, விவசாய விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் மையத்தி னை, தமிழ்நாடு ஆய்வுசெய்தார். அப்போது விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மதிப்பு க்கூட்டி விற்பனை செய்வதன் மூலமாக கூடுதல் வருமானம் பெற கேட்டுக்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட  வேளாண்மைத் துறை இணை இயக்குனர் இளவரசன் உள்ளிட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...