×

மாணவிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி விசிக அமைதி பேரணிக்கு தடை

விருத்தாசலம், மே 15: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கடந்த 8ம்  தேதி கல்லூரி மாணவி திலகவதி படுகொலை  செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்தும்,  மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம்  வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால்,  பாலக்கரையில் இருந்து சப்-கலெக்டர் அலுவலகம் வரை  அமைதி பேரணி நடத்த முடிவு எடுத்தனர். இதற்கும் போலீசார் தடை விதித்தனர். இதனால் அங்கு திரண்ட விசிக கட்சியினரை ஏஎஸ்பி தீபா சத்தியன் தலைமையிலான  போலீசார் கலைந்து போக செய்தனர்.இதன்  காரணமாக விருத்தாசலம் நீதிமன்றம் எதிரே உள்ள விசிக வழக்கறிஞர்  அணி அலுவலகத்தில் திலகவதியின் உருவப்படத்திற்கு  நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். திலகவதியின்  படுகொலையை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.  அவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு விசிக மண்டல செயலாளர்  திருமாறன் தலைமை தாங்கினார். வழக்கறிஞரணி காந்தி, மாநில முற்போக்கு மாணவர் அமைப்பின் துணை அமைப்பாளர்  நீதி வள்ளல் உள்ளிட்ட பலர் பங்ேகற்றனர். ஏஎஸ்பி தீபாசத்யன், இன்ஸ்பெக்டர்  சாகுல்அமீது தலைமையிலான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : peace rally ,Vicci ,
× RELATED ஊட்டியில் திபெத்தியர்கள் அமைதி பேரணி