×

நெல்லுக்கு மாற்றாக சிறுதானியம் பயிரிடலாம்

காளையார்கோவில், ஏப்.25: காளையார்கோவில் வட்டார விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாகச் சிறுதானியம் பயிரிட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் தெரிவித்துள்ளதாவது: காளையார்கோவில் வட்டாரத்தில் உள்ள பல்வேறு வருவாய் கிராமங்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நெல் பயிரிட்டு விளைச்சல் இல்லாத நிலையில் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றார்கள். இதனால் வரும் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பின் அளவை குறைத்துக்கொண்டு மாற்றுப் பயிர்களான பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை பயிரிடலாம். மேலும் தண்ணீர் வரத்து இல்லாத பகுதிகளில் சிறுதானிய பயிர்களான கம்பு, ராகி, வரகு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களையும் பயறு வகைகளான உளுந்து, தட்டைப்பயிறு மற்றும் எண்ணெய்வித்து பயிர்களான நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களை பயிர் செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : substitute ,
× RELATED ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை