×

பொதுப்பணித்துறை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வலது பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்பு

திருப்புவனம், ஏப். 25: மதுரை விரகனூர் மதகு அணையிலிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் மதுரை மாவட்ட கண்மாய்களுக்கும் சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வலது பிரதானக் கால்வாய் மதகிலிருந்து மானாமதுரை வரை 46 கி.மீ. நீளம் கொண்டது. மேல வெள்ளூர், கொந்தகை, மணலூர், திருப்புவனம், பிரமனூர், மார்நாடு, திருப்பாச்சேத்தி, பழையனூர், கட்டிக்குளம், மிளகனூர், கீழப்பசளை வரை சுமார் 72 கண்மாய்களுக்கு தண்ணீர கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இக் கண்மாய்கள் மூலம் சுமார் 27 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் விரகனூர் மதகு அணையிலிருந்து. திருப்புவனம் வரை கடந்த வருடம் கால்வாயை ஆழப்படுத்தும் பணி நடந்தது. இதற்காக பல லட்சம் செலவில் பணிகள் நடந்தன.

ஆனால் தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்போல உள்ளது. தண்ணீர் வரத்து இல்லை என்பதால் மணலூருக்கும் சக்குடி பாலத்திற்கும் இடையே கால்வாயில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் கீரை தோட்டம் அமைத்து வாழை பயிரிடடு சாகுபடி செய்து வருகின்றனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுப்பணித்துறையினர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை பராமரிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : department ,
× RELATED கோடை காலங்களில் மனிதர்களை போல...