×

திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருப்புத்தூர், ஏப்.25: திருப்புத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் நேற்று 85ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சொரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் தென்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் நேற்று 85ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெகு விமர்சியாக நடந்தது. இதையொட்டி திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூமாயி அம்மனுக்கு பால்குடம், மது எடுத்தும், பூச்சொரிந்தும் வழிபாடு செய்தனர். மேலும் நகரின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக மேல தாளத்துடன், வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ பூமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நகரின் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் இன்று வியாழக்கிழமை இரவு பூமாயி அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டப்பட்டு 10 நாள் வசந்தப்பெருவிழா துவங்குகிறது. தினந்தோறும் இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். தினந்தோறும் மண்டகப்படி தாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். 9ம் திருநாளன்று மாலை ஸ்ரீ பூமாயி அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை வந்தடையும். 10ம் திருநாளன்று பூமாயி அம்மனுக்கு, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அன்று இரவு காப்பு களைந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

Tags : Festival celebration ,Poomayi Amman Temple ,
× RELATED நவராத்திரி நிறைவு விழாவில் பூமாயி அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி