×

குன்னூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு

குன்னூர், ஏப். 24: குன்னூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னூர் மவுண்ட்ரோடு சாலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் குன்னூர் டவுன் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை கலந்து கொண்டு இருசக்கர வாகனஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் சீசன் நெருங்குவதையோட்டி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது, எனவே இருச்சக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும், மலைப்பகுதியில் மழைக்காலத்தின் போது சாலையில் எவ்வாறு பயணிக்க வேண்டும், அதிக வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இருச்சக்கர வாகனங்கள் ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது.

Tags : Kunar ,
× RELATED குன்னூர் ஐயப்பன் கோயில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு விழா