×

தனமந்தோரை சாலை சீரமைக்க வலியுறுத்தல்

மஞ்சூர், ஏப்.24: தனமந்தோரை சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மஞ்சூர் தாய்சோலா அருகே உள்ளது தனமந்தோரை. இப்பகுதியில் 50கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தனமந்தோரை பகுதியினர் மருத்துவமனை உள்ளிட்ட எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் தொலைதூரமுள்ள மஞ்சூர் மற்றும் ஊட்டி, குன்னுார் போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது. இந்நிலையில் தனமந்தோரை கிராமத்திற்கு செல்லும் சுமார் 3 கி.மீ., தூரமுள்ள சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் இருசக்கர வாகனங்கள் கூட சென்றுவர முடியாத நிலை காணப்படுகிறது. சமீபத்தில் இப்பகுதியில் பெய்த பலத்த மழையில் சாலை மேலும் பழுதடைந்தது. இதனால் தனமந்தோரை கிராமத்திற்கு தனியார் வாடகை வாகனங்களை இயக்க வாகன ஓட்டுனர்கள் தயங்குகின்றனர். சாலை பழுதடைந்தநிலையில் சரிவர போக்குவரத்து வசதியில்லாததால் கிராமமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து தனமந்தோரை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்க செயலாளர் மாதேவன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி