×

மக்களவை தேர்தலால் நிறுத்தப்பட்ட தார்ச்சாலை பணியை தொடங்குவது எப்போது? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை, ஏப். 24: மானாமதுரை ஒன்றியத்தில், சிப்காட்டிலிருந்து கொன்னக்குளம் செல்லும் ரோடு, பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த ரோடு குண்டும், குழியுமாக சேதமடைந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறியதால், கிராம மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். ரோட்டை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, மாவட்ட நிர்வாகம் பழைய ரோட்டை அகற்றிவிட்டு புதிய ரோடு அமைக்கும் பணியை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்ததால், ரோட்டின் இருபுறமும் மண் அகற்றப்பட்டு குண்டும் குழியுமாக இருந்த தார்ரோடு உடைக்கப்பட்டு சமப்படுத்தப்பட்டது. அதன்பின் ஜல்லிக்கற்கள் பரப்பி தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், கொன்னக்குளம், மணக்குளம், சூரக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம், பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், ‘பழைய ரோட்டில் டூவீலர்கள் சென்று வந்தன. ரோட்டை சீரமைக்கப் போவதாக கடந்த மார்ச் மாதம் பணிகளை தொடங்கினர். தேர்தலை காரணம் காட்டி ரோடு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னரும் பணிகளை துவக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், பல கிலோ மீட்டர் கண்மாய்க்குள், தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மாவட்ட கலெக்டர் ரோடு அமைக்கும் பணிகளை துவக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.

Tags : Tollakalai ,Lok Sabha ,elections ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...