×

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்

நாமக்கல், ஏப்.23:  பரமத்திவேலூரை அடுத்த செருக்கலை கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்திவேலூர் தாலுகா, செருக்கலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லாததால், இப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்களுக்காக, 3 கிலோ மீட்டர் வரை சென்று பொது குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து, தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி  50க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.  

இதுகுறித்து செருக்கலையை சேர்ந்த துரைசாமி கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், குடிப்பதற்கு போதிய தண்ணீர் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம். தற்போது, கோடை காலம் வாட்டும் நிலையில், 3 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால், பெண்கள், குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி,  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோம்,’ என்றார்.

Tags : Women ,office ,Collector ,evacuation ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...