×

திருமயம் பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருமயம், ஏப்.23: திருமயம் பகுதியில் பலத்த காற்றுடன் நேற்று மிதமான மழை பெய்ததால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திருமயம், லெணாவிலக்கு, பேரையூர், நற்சாந்துபட்டி, விராச்சிலை, காட்டுபாவா பள்ளிவாசல், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வானம் தடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதனை தொடர்ந்து பலத்து காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நீண்ட நாட்களாக அப்பகுதியில் வெயிலின் ஊஷ்ணத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. திருமயம் பகுதியில் பெய்த திடீர் மழையால் கோடை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அதே சமயம் திருமயத்தில் இருந்து கிழக்கு பகுதியில் மழை ஏதும் இல்லாததால் அப்பகுதி மக்கள் மழையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

கறம்பக்குடி: கறம்பக்குடி பகுதிகளில் கடந்த  6 மாதத்திற்கு மேலாக மழை இல்லாத காரணத்தால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியில் கூட வரமுடியாத நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.இந்நிலையில் நேற்று திடீரென நேற்று மாலை 4 மணிளவில் வானம் மேக மூட்டம் அதிகமாகி காணப் பட்டது. பின்னர்  கறம்பக்குடி பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில தினங்களாக புதுக்கோட்டை பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்தனர்.

Tags : rain farmers ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...