×

செருநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்

கீழ்வேளூர், ஏப்.23: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செருநல்லூர் திரவுபதியம்மன் கோயில்  தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. செருநல்லூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று  முன்தினம் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல்  கோயில் வளாகத்தில் இரவு 7 மணிக்கு தினம்தோறும் மகாபாரத கதை தொடங்கியது. மகாபாரத கதையில் தர்மர், கிருஷ்ணர் பிறப்பும், அம்பாள் பிறப்பும், திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 25ம் தேதி அர்ஜூனன் தபசும், 26ம் தேதி குவஞ்சியும், 27ம் தேதி கிருஷ்ணன் தூதுவும், 28ம் தேதி கர்ணன் மோட்சமும், அரவாண் களப்பலியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழச்சியாக 29ம் தேதி காலை அம்மன் கூந்தல் முடித்தலும், இரவு தீ மிதித் திருவிழாவும் நடைபெறுகிறது. 30ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை  விழா குழுவினர், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,temple ,Tirunavaya Amman ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...