இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேர்த்திருவிழா

திருச்செங்கோடு, ஏப்.19: திருச்செங்கோடு அருகேயுள்ள இறையமங்கலம் பெருமாள் மலையில், இளையபெருமாள் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தை காண திரளான பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (19ம் தேதி) இளைய பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை 6 மணிக்கு திருத்தேரில் எழுந்தருள்கிறார். மீண்டும் மாலை 3.45 மணிக்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  மொளசி கண்ணங்குல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை கவுரவ தலைவர் திருமலைக்கவுண்டர், தலைவர் இளையப்பன்,  துணைத்தலைவர்கள் சின்னுசாமி, பரமசிவம் ஆகியோர் செய்தனர்.

மத்தில் 190 ஆண், பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராததால், கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.  அவர்களிடம் வாக்குப்பதிவுக்கு முந்தைய  2 நாட்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று  காலை அரியூர் கஸ்பா கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு நடத்த அலுவலர்கள் காத்திருந்தனர். ஆனால் கிராம மக்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து கிராமத்தை சேர்ந்த  6 குடும்பத்தினர் தங்களது 10 வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மாலை வரை வாக்குச்சாவடியில் அதிகாரிகள் காத்திருந்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆனால், அறிவித்தபடி கிராம மக்கள் 180 பேர் வாக்களிக்க வரவில்லை. தேர்தலை புறக்கணித்து விட்டனர்.

× RELATED இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேர்த்திருவிழா