×

காதலுக்கு உதவியதால் பெண் உறவினர்கள் ஆத்திரம் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

சென்னை, மார்ச் 26: காதலுக்கு உதவியதால் பிறப்புறுப்பு அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சூர்யா (27). கேட்டரிங் படித்து முடித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பவுஞ்சூரை சேர்ந்த காயத்ரி (25) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டு, செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான காயத்திரி, கடந்த வாரம் தாய் வீட்டுக்கு சென்றார். சூர்யா மட்டும் தனியாக இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சூர்யா வீட்டுக்கு பைக்கில் வந்த 4 பேர், அவரை அழைத்து கொண்டு வெளியே சென்றனர். அதற்கு பிறகு சூர்யா, வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை மேலேரிபாக்கம் ஏரி வழியாக,  அப்பகுதியை சேர்ந்த சிலர் நடந்து சென்றபோது, ஒரு வாலிபர், கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, வாலிபரின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சடலத்தின் அருகே  பிளாஸ்டிக் டம்ளர் கிடந்தது. அனைவரும் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மேேலரிபாக்கத்தை ேசர்ந்த ராமு என்பவரின் மகள் ஹேமலதா. கல்லூரி மாணவி. செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் ஹேமாவிற்கு திருமணமானதாக பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஒட்டப்பட்டு  இருப்பதாக ராமுவுக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராமு சென்று ேஹமலதாவை பார்த்துள்ளார். அவரது கழுத்தில் தாலி இருந்துள்ளது. மேலும் இதுபற்றி ஹேமலதாவிடம் ேகட்டதற்கு, தனக்கும்,  அதே பகுதியை ேசர்ந்த கார்த்திக் என்பவருக்கும் ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடந்ததாகவும், தங்களுக்கு செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் சூர்யா தான் திருமணம் செய்து வைத்தார் என்றும் கூறியுள்ளார்.  இதனால், அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கின் அண்ணன் ஹரி உள்பட 4 ேபர் சூர்யா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து அவரை வெளியே அழைத்து ெசன்றனர். மேலேரிபாக்கம் ஏரிக்கு அழைத்து சென்று, அங்கு  அரிவாள் மற்றும் கத்தியுடன் காத்திருந்த ஹேமலதாவின் தாய் மாமன் அழகேசன் மற்றும் அவரது அண்ணன்கள் சந்தோஷ், விக்கி ஆகியோர் சூர்யாவின் கழுத்தை அறுத்தனர். பின்னர் ஆத்திரம் தீராமல் அவரது பிறப்புறுப்பையும்  அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

மதுராந்தகம் அடுத்த சிறுதாமூரை சேர்ந்தவர் முருகன் (29). பண்ணை காவலாளி. இவரது மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும், மறைமலைநகர் அடுத்த மட்டான ஓடை கிராமத்தில் உள்ள சாந்தகுமார் என்பவரது பண்ணை  வீட்டில் தங்கி, வேலை செய்து வந்தனர்.  நேற்று முன்தினம் இரவு பண்ணையின் ஒரு பகுதியில் முருகன் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும்  கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்தது. இதனை பல முறை கண்டித்துள்ளார். ஆனாலும், முருகன் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவன்  முருகனை தீர்த்து கட்டியிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ெதரியவந்துள்ளது.

உறவினர்கள் மறியல்
கொலையாளிகளை கைது  செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருேக மதுராந்தகம் -  செங்கல்பட்டு சாலையில் சூர்யாவின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர்கள்  இளங்கோவன், அந்தோணி  ஸ்டாலின் ஆகியோர் அங்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிம் சமரசம்  பேசினர். அப்போது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால், சூர்யாவின் உடலை  வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர்.  இதற்கு போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடுவோம் என  உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags : relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...