×

திருமயம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன ஆலமரம்

திருமயம்,மார்ச்.22: அரிமளம் போக்குவரத்து நிறைந்த சாலையோரம் உள்ள பட்டுப்போன மரம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே மரத்தை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வருடம் இறுதியில் வீசிய கஜா புயலில் பெரும்பாலான மரங்கள் வேரோடும், பாதி முறிந்தும் சேதமடைந்தது. இதில் தனியார் நிலங்களில் இருந்த மரங்கள் மட்டுமல்லாது சாலையோரம் மற்றும் அரசு நிலங்களில் இருந்த மரங்கள் பெருமளவு சேதமடைந்தது. அப்போது போர்க்கால அடிப்படையில் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் சேதமடைந்த மரங்களை அகற்றய நிலையில் இன்றளவும் ஒரு சில பகுதிகளில் மரங்கள் அகற்றபடாமல் உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அரிமளம் அடுத்துள்ள கே.புதுப்பட்டி கழனிவாசல் அரசு பள்ளி அருகே புதுக்கோட்டை-ஏம்பல் செல்லும் சாலையோரம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பட்டுப்போன அரச மரம் ஒன்று உள்ளது. இதன் அடிமரமானது நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதால் அப்பகுதியில் சிறயளவில் காற்றும் வீசினாலும் வேரோடு ஒடிந்து விழுத்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மரம் ஒடிந்துவிழும் பட்சத்தில் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பட்டுப்போன மரம் அருகே பள்ளி வளாகம், முக்கிய சாலை, குடியிறுப்புகள், மின்கம்பங்கள் உள்ளதால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...