×

குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

புதுக்கோட்டை, மார்ச் 22:    குழந்தைகள் நலனை பிரதானமாகக்கொண்டு,  பாலின வித்தியாசத்திமின்றி, 18 வயதிற்கு கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகள்  மீதான பாலியல் குற்றங்களுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது, இந்தியாவில், பாலியல் குற்றங்களிலிருந்து பாலின வித்தயாசமின்றி, 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். அதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இச்சட்டம் வரும் முன், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளை கையாண்டன. ஆனால், தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும், பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன் வைக்கிறது. இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் வழக்கு முடிய வேண்டும். தண்டனை நிரூபணம் ஆகும்பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சில வகை பாலியல் வன்முறைக்கு கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும்போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கும் சட்டம் 2012  என்ற போக்ஸோ சட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  காவல்துறை அலுவலர்களாக  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பழகன், தொடர்பு எண்: 9443348583, adsphqrspd@gmail.com  என்ற மின்னஞ்சலிலும், துணை காவல் கண்காணிப்பாளர் ஆலங்குடி  அய்யனார், எண்:9443838166, குழந்தை கடத்தல் அலகு இன்ஸ்பெக்டர் லெட்சுமி எண்: 9498110803, அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ  சரண்யா எண்: 9498607849,  ஆகிய காவல்துறை அலுவலர்களுக்கு கைபேசி வாயிலாகவும், அல்லது தபால் மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டியால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : District administration ,Boccas ,sex offenders ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்