×

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை குழந்தைகள் நலன், அறுவை சிகிச்சை முகாம்

காரைக்கால், மார்ச் 22: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நாளை (23ம்தேதி ) நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதம் இருமுறை நடைபெறும் முகாமாக,  காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நாளை (23ம்தேதி) ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Karaikal Government Hospital ,Children's Health and Surgery Camp ,
× RELATED காரைக்கால் அரசு மருத்துவமனையில்...