×

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2வது நாளும் வேட்பு மனு தாக்கல் இல்லை

திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு  நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் அன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன் வரவில்லை. 2 வது நாளான நேற்றும் யாரும்  வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. காலை 11 மணி முதல், மாலை 3 மணி வரை, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கலுக்காக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கல் மையத்தில் இருந்து 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வேட்பு மனு தாக்கல் துவங்கி 2வது நாளான நேற்றும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள முதல் தளம் வெறிச்சோடி காணப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தயார் நிலையில் இருந்தும், எந்த வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.ஆனால், தேர்தலில் போட்டியிட இதுவரை 20 பேர் வேட்புமனுக்களை மட்டும் தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் பெற்றுச் சென்றுள்ளனர். இன்று பங்குனி உத்திரம் என்பதால் வேட்புமனு தாக்கல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : constituency ,Thiruvallur ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...