×

மசினகுடியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

ஊட்டி, மார்ச் 21:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரம் பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு கோமாரி நோயில் இருந்து பாதுகாக்க 16வது சுற்றாக  தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
 இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், ஆச்சக்கரை, ெதாட்டலிங்கி, சொக்கநள்ளி, மாயார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ள கால்நடைகளுக்கு ேகாமாரி நோய் தடுப்பூசி  முகாம் நேற்று நடந்தது. இம்முகாமில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி ேபாடப்பட்டது. கால்நடைகளுக்கு பரவும் நோய்கள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் மசினகுடி ரேஞ்சர் மாரியப்பன், கால்நடை துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Komari ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி முகாம்