×

முதல் நாளில் 2 சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்

கோவை.மார்ச்20: கோவை மக்களவை தொகுதி வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று இரண்டு சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.இதில்,கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில், முதல் நாளான நேற்று கோவை தொகுதியில் போட்டியிட கோவை, காளப்பட்டி ரோட்டை சேர்ந்த வசந்த்குமார் (45) என்பவர் சுயேட்சையாக போட்டியிட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜாமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர்முகமது என்பவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட தனது ஆதரவாளர்களை கை வண்டியில் வைத்து இழுத்தபடி மனுதாக்கல் செய்ய வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்திய பின் தனியாக சென்று வேட்பு மனுவை தாக்கல்
செய்தார்.


Tags : Independent ,candidate ,
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...