×

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர ஊடக கண்காணிப்பு பிரிவு தொடக்கம்

நாமக்கல், மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஊடக கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலையொட்டி செயற்கைகோள் தொலைகாட்சிகள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கண்காணிக்க, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்கணிப்பு குழுவினர் செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் விளம்பரங்கள், பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணிப்பார்கள். மேலும், தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரம் குறித்த செய்திகள், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுவதை பதிவு செய்வார்கள்.
தொலைக்காட்சி செய்திகளை பார்வையிட வசதியாக, 6 டிவிக்கள் பொருத்தப்பட்டு ஒரே நேரத்தில் 20 தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகளை பார்வையிடும் வசதிகளும், 20 தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும், 24 மணி நேரமும் தொடர்ந்து பதிவு செய்யும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் செய்திகளை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடந்து வருகிறது. மேலும், அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகி வரும் உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பும் கண்காணிக்கப்படுகிறது. கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒளிபரப்பு விவரங்களை பதிவேடுகளிலும் பதிவு செய்து வருகின்றனர்.

Tags : Media Monitoring Division ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...