×

திமுக தலைவருடன் வேட்பாளர் சந்திப்பு

சிவகங்கை, மார்ச் 19: மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியதாசன் நேற்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் அண்ணாத்துரை, செல்வராஜ், ராஜாமணி, சக்திமுருகன், பொன்னுச்சாமி, நாகூர் கனி மற்றும் மானாமதுரை தொகுதி திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Tags : Candidate Meeting ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி